இந்தியாவுக்கு சொந்தமான கோகினூர் வைரம் இங்கிலாந்தில் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் தலையை அலங்கரித்த கிரீடத்தில் விலை உயர்ந்த கோகினூர் வைரம் பதிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் இரண்டாம் எலிசபெத்தின் மறைவுக்கு பிறகு பல்வேறு தரப்பினர் கோகினூர் வைரத்தை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது தொடர்பாக ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஜெகன்நாத் சேனா அமைப்பாளார் பிரியதர்ஷன் பட்நாயக் குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுக்கு ஒரு மனு எழுதி அனுப்பியுள்ளார். அதில் பஞ்சாப் மன்னர் ரஞ்சித் சிங் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த நாதிர்ஷாவை போரில் தோற்கடித்தார்.
இந்த வெற்றியின் நினைவாக பூரி ஜெகநாதருக்கு கோகினூர் வைரம் பரிசாக வழங்கப்பட்டது. ஆனால் உடனடியாக அந்த வைரத்தை ஒப்படைக்கவில்லை. அதன்பின் ரஞ்சித் சிங் மறைவுக்குப் பிறகு அவருடைய மகன் துலீப் சிங்கிடம் இருந்த கோகினூர் வைரத்தை ஆங்கிலேயர்கள் பறித்து சென்றுள்ளனர். நான் இது தொடர்பாக இங்கிலாந்து ராணிக்கு ஒரு கடிதம் எழுதி அனுப்பியபிறகு கடந்த 2016-ஆம் ஆண்டு அக்டோபர் 19-ஆம் தேதி அரண்மனையில் இருந்து எனக்கு ஒரு தகவல் வந்தது. மேலும் கோகினூர் வைரத்தை இந்தியாவிற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளில் ஜனாதிபதி தலையிட வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.