Categories
பல்சுவை

டாடா மோட்டார்ஸின் புதிய எலக்டிரிக் கார்?… ஒருமுறை சார்ஜ் செய்தால் போதும்…. 250 கிமீ தூரம் வரை போகும்…. சூப்பர் தகவல்….!!!!

இந்திய ஆட்டோ சந்தையில் மின்சார வாகனங்களுக்குரிய தேவை வேகமாக அதிகரித்து வருகிறது. இதனைக் கருத்தில்கொண்டு வாகனத் தயாரிப்பாளர்கள் தொடர்ந்து மின்சார வாகன தயாரிப்பில் முழுகவனம் செலுத்தி வருகின்றனர். இதற்கிடையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனமும் எலக்டிரிக்கார்களை உருவாக்க முனைப்புகாட்டி வருகிறது. ஆகவே விரைவில் டாடா டியாகோவின் எலக்ட்ரிக் வேரியண்ட்டை அறிமுகப்படுத்த இருக்கிறது. டாடா மோட்டார்ஸ் முன்வே மின்சார வாகன போர்ட்போலியோவில் நெக்ஸான் மற்றும் டைகோர் போன்ற 2 கார்களைக் கொண்டுள்ளது.

இதில் நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் இந்திய சந்தையில் நல்ல விற்பனையாகி வருகிறது. டாடா டியாகோ எலக்ட்ரிக் ஹேட்ச் பேக்கின் மதிப்பிடப்பட்ட விலையானது ரூ.12.5 லட்சத்துக்கும் குறைவாக இருக்கலாம். மலிவான ஹேட்ச் பேக் எலக்ட்ரிக் காராக இது இருக்கும் என கூறப்படுகிறது. ஒருமுறை சார்ஜ் செய்தால் அது சுமார் 250 கிமீ தூரம் வரை போகும். டாடா அல்ட்ராஸின் எலக்ட்ரிக்வாகன (EV) மாடலையும், டாடா மோட்டார்ஸ் அறிமுகப்படுத்தலாம் என நம்பப்படுகிறது. NexonEV-ன் வெற்றிக்குப் பின், டாடா அதன் மற்ற கார்களையும் EV செக்மென்ட்டில் அறிமுகப்படுத்த திட்டமிட்டு இருக்கிறது. அடுத்த 5 வருடங்களில் 10 எலக்ட்ரிக் வாகன மாடல்களை அறிமுகப்படுத்த டாடா மோட்டார்ஸ் இலக்கு நிர்ணயித்து இருக்கிறது.

இந்நிலையில் டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகனங்களின் நிர்வாக இயக்குநர் ஷைலேஷ் சந்திரா கூறியதாவது, இது நம் அனைவருக்கும் முக்கியமான தருணம் ஆகும். Tiago EV உடன், எங்களது EV பிரிவின் விரிவாக்கத்தை நாங்கள் அறிவிக்கிறோம். அடுத்த சில வாரங்களில் நிறுவனம் Tiago EV விலை மற்றும் பிற முக்கிய தகவல்களை தெரிவித்து விடும். இப்போது 40,000-க்கும் அதிகமான நெக்ஸான் EV மற்றும் Tigor EV கார்கள் நாட்டின் சாலைகளில் ஓடுகிறது என்றார். இதனிடையில் இந்தியாவை எலக்ட்ரிக் வாகன மையமாக மாற்றுவதை இலக்காகக் கொண்டிருப்பதாக கூறி இருக்கும் டாடா மோட்டார்ஸ், Tata Passenger Electric Mobility (TPEM) TPG Rise Climate உடன் இணைந்து பசுமையான பயணத்தை ஊக்குவிக்கும் நோக்கத்தில் மொபிலிட்டி தீர்வையும் அறிமுகப்படுத்தி இருக்கிறது. 2030ஆம் வருடத்திற்குள் சாலைகளில் இயங்கக்கூடிய கார்களில் 30 % மின்சாரம்வாகனங்களாக இருக்கவேண்டும் என்று மத்திய அரசானது விரும்புவது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |