இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு முன்னாள் எம்.எல்.ஏ பழ.கருப்பையா பேசினார். அப்போது அவர் கூறியதாவது, ‘சென்னை வண்ணாரப்பேட்டையில் பெண்கள், வயதானவர்கள், குழந்தைகள் என ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள், அமைதியான முறையில் போராடியவர்கள் மீது திடீரென்று தடியடி நடத்த உத்தரவிட்டது யார் ? ஏன் தடியடி நடத்தினார்கள் ? என்ற காரணத்தை இந்த அரசாங்கம் சொல்லுமா என்றால் சொல்லாது. இந்த ஆட்சியாளர்கள், தூத்துக்குடி மாடலில் எல்லா போராட்டங்களையும் அடக்கத் தயாராகி உள்ளனர்.
பாஜகவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கொள்கை வகுப்பாளரான சவர்க்கரைப் போல மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்து தங்களது விடுதலையை யாசித்தவர்களல்ல. இந்த நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் இஸ்லாமியர்களின் பங்கு மிக முக்கியமானது. அவர்கள் அனுபவித்த இன்னல்கள், அவர்கள் செய்த தியாகங்கள் அளபரியது. அவர்கள் வாய்ச்சொல் வீரர்களல்ல, தீர்க்கமாக போராடியவர்கள். இந்த நாட்டை உண்மையாகவும் உறுதியாகவும் நேசிக்கும் இஸ்லாமியர்களுக்கு இந்த நாட்டில் அனைத்து உரிமைகளும் உள்ளன.
குடியுரிமைத் திருத்தச்சட்டம், இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கே எதிரானது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை நாம் அனைவரும் பாஜக அரசிடம் இருந்து அவசர கால அடிப்படையில் காப்பாற்ற வேண்டும். இந்த சட்டத்தால் இஸ்லாமியர்கள் பாதிக்கப்படும் நிலை உள்ளது. எனவே, இந்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும்’ என பேசினார்.