Categories
தேசிய செய்திகள்

பிஎஃப் பணத்தை சரிபார்க்க 5 எளிய வழிமுறைகள்… முழு விவரம் இதோ…!!!!!

ஊழியர்களால் தங்களது பிஎஃப் கணக்கில் எவ்வளவு இருப்பு இருக்கிறது என்பதை சரி பார்க்க சிரமப்படாமல் வீட்டில் இருந்தபடியே அதனை சரிபார்த்துக் கொள்வதற்கான வழிமுறைகள் பற்றி இந்த தொகுப்பில் காண்போம். அதாவது இபிஎப்ஓ தளத்திற்கு சென்று பணியாளர் பகுதியிலுள்ள மெம்பர் பாஸ்புக் என்பதை கிளிக் செய்து அதில் உங்களது யூ ஏ என் மற்றும் பாஸ்வேர்ட் லாக் இன் செய்து எவ்வளவு தொகை இருக்கிறது என்பதை சரி பார்த்துக் கொள்ளலாம். யூனிஃபைடு ஹோட்டலில் உள்ள உங்களது யுஏஎன் மற்றும் பாஸ்வேர்டை உள்ளிட்டு பிஎப் பாஸ் புக் என்பதை திறந்து உங்கள் pf கணக்கில் எவ்வளவு தொகை இருக்கிறது என்பதை சரி பார்த்துக் கொள்ளலாம்.

அதன்பின் உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 7738299899 என்ற எண்ணிற்கு EPFOHO UAN ENG என்று மெசேஜ் செய்வதன் மூலமாக பிஎஃப் இருப்பை சரிபார்த்துக் கொள்ள முடியும். அடுத்தபடியாக உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 011-22901406 என்ற எண்ணிற்கு அழைத்தால் ஒரு சில நொடிகளில் அந்த அழைப்பு கட் செய்யப்பட்டு உங்கள் பிஎப் என் பற்றிய விவரம் அனுப்பப்படுகிறது. மொபைலில் UMANG APP டவுன்லோட் செய்து வைத்துக் கொண்டு அதில் பிஎப் இருப்பு மற்றும் இதர பி எப் விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

Categories

Tech |