நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதை தடுக்கும் விதமாக மத்திய அரசு பாஸ்டேக் மூலம் இணைய வழியில் சுங்க கட்டணம் வசூலிக்கும் முறையை நடைமுறைப்படுத்தியுள்ளது. இந்த நடைமுறை அமல்படுத்தப்பட்ட பின் ஒரு வாகனம் சுங்க சாவடியை கடக்க சராசரியாக 47 வினாடிகள் மட்டுமே ஆகின்றது. இதற்கு முன்பாக ஒரு மணி நேரத்திற்கு 112 வாகனங்கள் மட்டுமே சுங்கச்சாவடியை கடந்துள்ள நிலையில் தற்போது 260 வாகனங்கள் ஒரு மணி நேரத்தில் சுங்கச்சாவடியை கடக்கின்றது. அந்த அளவிற்கு நேரத்தை மிச்சப்படுத்தும் விதமாக பாஸ்ட்டேக் குறித்த அப்டேட் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதாவது எஸ்பிஐ பாஸ்ட்டேக் பயன்படுத்துவதாக இருந்தால் அந்த வாடிக்கையாளர்களுக்கு வங்கி புதிய சேவை அறிமுகப்படுத்தி இருக்கிறது பாஸ்டேக் கட்டணம் அறிந்து கொள்வது உங்களுக்கு இதுவரை சிரமமாக இருந்தால் ஒரே ஒரு எஸ்எம்எஸ் மூலம் உங்களின் இருப்பை அறிந்து கொள்ள முடியும் இது பற்றி அப்டேட்டை sbi வங்கி ட்விட்டரில் கூறியுள்ளது.
மேலும் வாடிக்கையாளர் தனது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து 7208820019 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும் இதனை பதிவு செய்தவுடன் எஸ்பிஐ ஃபாஸ்டேக்கின் நிலுவைத் தொகை உங்கள் மொபைலுக்கு வந்து விடுகிறது. வங்கியில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து எஸ்எம்எஸ் சார்ட்டில் FTBAL என டைப் செய்ய வேண்டும். அதன் பின் இந்த செய்தியை எஸ்எம்எஸ் பகிர்ந்துள்ள 7208820019 என்ற எண்ணிற்கு அனுப்ப வேண்டும் மேலே குறிப்பிட்டுள்ள எண்ணிற்கு இந்த செய்தியை அனுப்பிய பின் சிறிது நேரம் காத்திருக்கவும் அதன் பின் எஸ்பிஐ ஃபாஸ்ட்டேக் இருப்பு பற்றிய செய்தி உங்கள் மொபைலில் பெறப்படுகிறது. பாஸ்ட் ட்ராக் வருகைக்கு பின் நாடு முழுவதும் சுங்கச்சாவடிகள் மூலமாக வசூலிக்கப்படும் தொகை உயர்ந்துள்ளது மேலும் நேர குறைவும் ஏற்பட்டிருப்பதால் வாகன ஓட்டிகளுக்கு வசதியாக உள்ளது