அதிமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவரும் , அதிமுக இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி கே.பழனிசாமி, இந்தியாவிலேயே சூப்பர் முதலமைச்சர் தமிழ்நாடு முதலமைச்சர் என ஸ்டாலின் பேசுகிறார், எதுல சூப்பர் ? லஞ்சம் வாங்குவதில் சூப்பர். கமிஷன், கலெக்ஷன், கரெப்க்ஷன் துல்லியமாக செய்கிறார்.
அதில் முதன்மையாக விளங்கக்கூடிய முதலமைச்சர் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், அதில் மாற்று கருத்து இல்லை. ஆனால் 15 மாத கால திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில், அண்ணா திமுக ஆட்சியில் கொண்டு வந்து திட்டம் நிறைவேற்றப்பட்டு, அதற்கு ரிப்பன் கட் பண்ற வேலைதான் 15 மாதமாக செய்து கொண்டிருக்கிறார்.
நீங்கள் என்ன பொது திட்டத்தை கொண்டு வந்தீர்கள்? அதனால் என்ன மக்களுக்கு நன்மை கிடைத்திருக்கிறது, அந்தத் திட்டத்தை ஏதாவது துவக்கி வைத்துள்ளீர்களா? ஒன்றுமே கிடையாது. அண்ணா திமுக ஆட்சியில் நல்ல சாலை வசதிகள், கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலமாக குடிநீர், அதற்கு மேலாக ஆனைமலை நல்லாறு திட்டத்தை நாங்கள் நிறைவேற்ற வேண்டும் என்று நானும், நம்முடைய அமைச்சர் அருமை சகோதரர் வேலுமணி அவர்களும் கேரளா சென்று முதலமைச்சர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினோம், அந்த பேச்சுவார்த்தையில் தமிழ்நாடு அரசும், கேரளா அரசும் இணைந்து ஒரு குழுவை அமைத்தோம்.
நம்முடைய அதிகாரிகளும், தமிழ்நாட்டில் இருக்கின்ற பொதுப்பணித்துறை அதிகாரிகள், ஐஏஎஸ் அதிகாரிகள், கேரள மாநிலத்தை சேர்ந்த பொதுப் பணித்துறை அதிகாரிகள், கேரளத்தை சேர்ந்த அந்த செயலாளர் என இவர்களிடம் குழு போட்டு, இரண்டு மூன்று முறை குழுக்கள் சந்தித்து கருத்து பரிமாற்றம் நடைபெற்றுக் கொண்டிருந்தது.ஆனால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுவிட்டது, அதனால் ஆனைமலை நல்லா திட்டம் அப்படியே நிலுவையில் நின்று இருக்கிறது.
இதில் எடப்பாடி பழனிசாமி கமிஷன், கலெக்ஷன், கரெப்க்ஷன் என பேசியது அதிமுக ஆட்சியில் இருந்த போது அப்போதைய அரசை எதிர்க்கட்சியாக இருந்த திமுக விமர்சித்த அதே வார்த்தை. அந்த வார்த்தையை அப்படியே எடப்பாடி பழனிசாமி சொல்லி விமர்சிப்பது, எடப்பாடி அதிரடி அரசியலை கையில் எடுத்துள்ளதாக அதிமுக தொண்டர்கள் பெருமிதம் கொள்கின்றனர்.