Categories
சினிமா தமிழ் சினிமா

“எனக்கு அது சுத்தமா புடிக்கல” முதல் மனைவியை போன்று குறை கூறிய மகாலட்சுமி…. ரவீந்தருக்கு வந்த சோதனை….!!!!

சன் மியூசிக் விஜேவாக அறிமுகமான மகாலட்சுமி தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். இவர் தயாரிப்பாளர் ரவீந்தரை கடந்த 2 வருடங்களாக காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருப்பதியில் வைத்து உறவினர்கள் முன்னிலையில் எளிமையாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு திருமணம் ஆகி 10 நாட்களைக் கடந்தும் ரவீந்தர் மற்றும் மகாலட்சுமியின் திருமணம் குறித்த தகவல்கள் தான் தற்போது வரை சமூக வலைதளங்களில் ஹாட் டாப்பிக்காக இருக்கிறது. இந்நிலையில் மகாலட்சுமிக்கு ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு மகன் இருக்கும் நிலையில், ரவீந்தரை 2-வதாக திருமணம் செய்து கொண்டுள்ளார். இது ரவீந்தருக்கும் 2-வது திருமணம் தான். ஆனால் மகாலட்சுமி ரவீந்தரின் பணத்திற்கு ஆசைப்பட்டு தான் அவரை திருமணம் செய்துள்ளதாக பலர் இணையதளத்தில் விமர்சித்து வருகின்றனர்.

இது குறித்து சமீபத்தில் ஒரு youtube சேனலுக்கு மகாலட்சுமி அளித்த பேட்டியில் ரவீந்தரின் தொழில்தான் எனக்கு மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கிறது என்று கூறியுள்ளார். அதாவது ரவீந்திரன் முதல் மனைவி போன்று மகாலட்சுமிக்கும் அவருடைய தொழில்தான் மிகப்பெரிய பிரச்சினையாக இருக்கிறதாம். ஏனெனில் ரவீந்தர் ஒரு தயாரிப்பாளராக இருப்பதால்தான் மகாலட்சுமி பணத்திற்கு ஆசைப்பட்டு திருமணம் செய்து கொண்டதாக பலர் கூறுகிறார்கள். ஒருவேளை ரவீந்தர் ஒரு தயாரிப்பாளராக இல்லாமல் இருந்து சாதாரண மனிதராக இருந்தால் கூட நான் திருமணம் செய்து இருப்பேன் என்று மகாலட்சுமி கூறியுள்ளார். மேலும் மகாலட்சுமி 1 மாதத்திற்கு 3 லட்சம் ரூபாய் வரை சம்பாதிப்பதால் எதற்காக ரவீந்தரை பணத்திற்கு ஆசைப்பட்டு திருமணம் செய்து கொள்ள வேண்டும் என அவரது ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Categories

Tech |