Categories
மாநில செய்திகள்

அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்கள்….. உடனே இத செய்யுங்க…. வெளியான எச்சரிக்கை அறிவிப்பு….!!

இந்தியாவில் கடந்த‌ 20 வருடங்களாக அடுக்குமாடி குடியிருப்பு கலாச்சாரம் பெருகிக்கொண்டே இருக்கிறது. மக்கள் தொகை பெருக்கம் மற்றும் இடப்பற்றாக்குறை போன்ற காரணங்களால் தான் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படுகிறது. பெரிய நகரங்களை பொறுத்தவரை ஒரு தெருவில் தனி வீடுகளை விட அடுக்குமாடி குடியிருப்புகள் தான் அதிக அளவில் இருக்கும். இந்த அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டுவதற்கு அரசு பல்வேறு நிபந்தனைகளையும், கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது. அரசு விதித்த நிபந்தனை மற்றும் கட்டுப்பாடுகளை முறையாக பின்பற்றி தான் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட வேண்டும்.

இந்த கட்டுப்பாடுகளை மீறி ஒருவேளை அடுக்குமாடி குடியிருப்புகள் அரசினால் ஆய்வு நடத்தப்பட்டு இடிக்கப்படும். இதேபோன்று அடுக்குமாடி குடியிருப்புகளில் குடிநீர் வசதி, கழிவு நீர் மற்றும் வாகனம் நிறுத்தம் போன்ற பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது. அவற்றை அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்கள் முறையாக கடைப்பிடிக்கிறார்களா என்பது குறித்தும் அடிக்கடி ஆய்வு செய்யப்படுகிறது. அந்த வகையில் சென்னை மாநகராட்சியில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதில் அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகங்கள் தொழில்நுட்ப பூங்காக்களில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை முறையாக பராமரித்து சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். இந்த உத்தரவை பின்பற்றாத கட்டிடங்களில் மின் இணைப்பு துண்டிப்பு, கட்டிடங்களை மூடுதல் மற்றும் சீல் வைத்தல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மேலும் கழிவு நீரை சுத்திகரித்து அதை மறுசுழற்சி செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Categories

Tech |