Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மனைவி கள்ளக்காதலன் கொலை…. கணவர் போலீசில் சரண்

கள்ளக்காதலில் ஈடு பட்ட மனைவி மற்றும் கள்ளக்காதலனை கொலை செய்து போலீசில் சரணடைந்த  கணவர்.

தூத்துக்குடி  மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே வசித்து வருபவர் சண்முகம் மாரியம்மாள் தம்பதியினர். இவர்களுக்கு மூன்று மகள்களும் இரண்டு மகன்களும் உள்ளன.ர் மகனுக்கும் மகளுக்கும் திருமணம் ஆகி வெளியூரில் உள்ள நிலையில் ஒரு மகன் மட்டும் திருமணம் ஆகாத நிலை கோயம்புத்தூரில் பணிபுரிந்து வருகிறார். இதனால் கணவன்-மனைவி மட்டுமே வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளனர்.

அதே பகுதியை சேர்ந்த ராமமூர்த்தி என்பவர் மாரியம்மாளின் வீட்டில் அருகே புதிதாக வீடு கட்டி குடியேற இருந்துள்ளார். இந்நிலையில் ராமமூர்த்தி மாரியம்மாளுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதனை அறிந்த சண்முகம் இரண்டுபேரையும் கண்டித்துள்ளார். பிறகும் இவர்களது தொடர்பு நீடித்துள்ளது. எனவே அவர்களை பிடிக்க வேண்டுமென சண்முகம் மதுபோதையில் இருப்பது போல் கிடந்துள்ளார்.

இதனை அறியாத ராமமூர்த்தி சண்முகம் மதுபோதையில் இருக்கிறார் என நினைத்து வீட்டிற்கு வந்து மாரியம்மாளுடன் தனிமையில் இருக்கையில் சண்முகம் சென்று படுக்கையில் இருந்த மரியம்மாவையும் ராமமூர்த்தியையும் வீட்டில் இருந்த அரிவாளால் சரமாரியாக வெற்றியுள்ளர். இதில் ராமமூர்த்தி தலை துண்டிக்கப்பட்டு இறந்தார். படுகாயமடைந்த மாரியம்மாளும்  சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனை அடுத்து ரத்தக்கரை படிந்த அரிவாளுடன் காவல்துறையில் சரணடைந்தார் சண்முகம்.

By inza dev

IF YOU WANT TO KNOW MEANS THEN TRY TO FIND ME AND ASK ME

Categories

Tech |