8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள காங்கேயம் பகுதியில் லோகநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 27-10-2020 அன்று 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொட்டுத்துள்ளார். இது குறித்து அறிந்த சிறுமியின் தாயார் காங்கேயம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் லோகநாதனை கைது செய்துள்ளனர். இதுகுறித்த வழக்கு விசாரணை திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அதில் லோகநாதனுக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.14 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி நாகராஜன் தீர்ப்பளித்துள்ளார்.