வீட்டில் இருந்த பெண் காணாமல் போனது அடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
தேனி மாவட்டம் போடியை சேர்ந்த முத்தையஞ்செட்டிபட்டியை சேர்ந்தவர் மணவாளன். இவரது மகள் பேபி ஷாலினி போடியில் இருக்கும் தனியார் கல்லூரி ஒன்றில் மூன்றாமாண்டு படித்து வந்துள்ளார். சம்பவத்தன்று வீட்டில் இருந்த பேபி ஷாலினி திடீரென காணாமல் போயுள்ளர். மகனை காணாததும் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடியுள்ளார் தந்தை மணவாளன். எங்கு தேடியும் மகள் பேபி ஷாலினி கிடைக்காத நிலையில் போடி தாலுகாவிற்கு உட்பட்ட காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் மணவாளன். அவர் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிந்து பேபி ஷாலினியை விரைந்து தேடிவருகின்றனர்.