Categories
கிரிக்கெட் தேசிய செய்திகள் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

இந்த 3 பேரை ஏன் சேர்க்கல….. “கிரிக்கெட் பார்க்க மாட்டேன்”….. என்ன காரணம்?….. ஆவேசமான காங்கிரஸ் தலைவர்..!!

அணி தேர்வு முறை சரியில்லை என்று குற்றம் சாட்டிய அவர், இந்திய அணியில் நியாயமான தேர்வு நடக்கும் வரை கிரிக்கெட்டை பார்க்க மாட்டேன் என்று காங்கிரஸ் தலைவர் தௌசீப் ஆலம் கூறியுள்ளார்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் அடுத்த அக்டோபர் 16ஆம் தேதி தொடங்கி நவம்பர் 13ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த டி20 உலக கோப்பையில் பங்கேற்கும் நாடுகள்  தங்களது அணிகளை செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) கெடு விதித்திருந்தது. அதன்படி இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உட்பட பல்வேறு நாடுகளும் ஏற்கனவே அணியை அறிவித்து விட்டன.. இந்த நிலையில் நடந்து முடிந்த ஆசிய கோப்பையில் கோப்பையை வெல்ல முடியாமல் வெளியேறிய பின் நேற்று முன்தினம்  இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) டி20 கிரிக்கெட்டில் பங்கேற்கும் இந்திய அணியை அறிவித்தது.

இந்த அணியில் ஆசிய கோப்பை தொடரில் இடம் பிடித்த பெரும்பான்மையான வீரர்கள் இடம் பிடித்ததால் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.. மேலும் காயம் காரணமாக ஆசியக்கோப்பை தொடரில் பங்கேற்காமல் இருந்த ஜஸ்பிரிட் பும்ரா, ஹர்ஷல் பட்டேல் இடம் பிடித்துள்ளனர்.. இவர்கள் இருவரை தவிர்த்து அணியில் பெரிய மாற்றம் எதுவும் நிகழவில்லை. இந்திய அணி தேர்வு குறித்து பலரும் இவரை தேர்ந்தெடுக்க வேண்டும், அவரை தேர்ந்தெடுக்க வேண்டும் என பல்வேறு விதமான கேள்விகளை ரசிகர்கள் மட்டுமின்றி முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவரும், பீகாரிலுள்ள கிஷன்கஞ்ச் மாவட்டத்தின் பஹதுர்கஞ்ச் சட்டமன்றத்தின் முன்னாள் உறுப்பினருமான தௌசீப் ஆலம், டி20 உலகக் கோப்பைக்கு தேர்வு செய்யப்படும் இந்திய அணி குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, டி20 உலகக் கோப்பை இந்திய அணியில் இருந்து முகமது ஷமி, கலீல் அகமது மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் நீக்கப்பட்டது ஆச்சரியமாக இருக்கிறது. அணித் தேர்வு முறை நியாயமானது அல்ல, இந்திய அணியில் நியாயமான தேர்வு நடக்கும் வரை கிரிக்கெட்டை பார்க்கப் போவதில்லை” என்று தெரிவித்தார்.

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி பின்வருமாறு:

ரோகித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பந்த் (வி.கே), தினேஷ் கார்த்திக் (வி.கே.), ஹர்திக் பாண்டியா, ஆர். குமார் ஹர்ஷல் படேல் மற்றும் அர்ஷ்தீப் சிங்.

காத்திருப்பு வீரர்கள் : முகமது ஷமி, ஷ்ரேயாஸ் ஐயர், ரவி பிஷ்னோய், தீபக் சாஹர்.

Categories

Tech |