தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று(14-09-2022) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
திருப்பூர் மாவட்டம்:
அவினாசி மின்சார வாரிய செயற்பொறியாளர் பி.பரஞ்சோதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது: பழங்கரை,பெருமாநல்லூர் ஆகிய துைண மின்நிலையங்களில் 14-ந்தேதி (புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை அவினாசிலிங்கம்பாளையம், அணைப்புதூர், தங்கம் கார்டன், விஸ்வபாரதிபார்க், பழங்கரை, தேவம்பாளையம், டீ பப்ளிக் ஸ்கூல், ஸ்ரீராம்நகர், நல்லிகவுண்டம்பாளையம், கைகாட்டிபுதூர் ஒரு பகுதி, ராஜன்நகர், ஆர்.டி.ஓ.ஆபிஸ், கமிட்டியார் காலனி, குளத்துப்பாளையம்,வெங்கடாசலபதி நகர், துரைசாமி நகர், பெரியாயிபாளையம் ஒரு பகுதி, பள்ளிப்பாளையம், வி.ஜி.வி.நகர், திருநீலகண்டர் வீதி,நெசவாளர் காலனி, எம்.ஜி.ஆர்.நகர், மகாலட்சுமிநகர், முல்லைநகர், தன்வர்ஷினி அவென்யூ ஆகிய பகுதிகளிலும்,
பெருமாநல்லூர், கணக்கம்பாளையம்,காளிபாளையம், புதுப்பாளையம், சடையம்பதி, பூலுவப்பட்டி, பாண்டியன்நகர்,எம்.தொட்டிபாளையம், மேற்குபதி, வலசுப்பாளையம், கந்தம்பாளையம், அய்யம்பாளையம், ஆண்டிபாளையம், நெருப்பெரிச்சல், செட்டிபாளையம், வாவிபாளையம், தொரவலூர் ஆகிய பகுதிகளிலும் மின்வினியோகம் தடை செய்யப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம்:
நெல்லை கிராமப்புற மின் கோட்டத்துக்கு உட்பட்ட மானூர் துணை மின்நிலையத்தில் 14-ந் தேதி (புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே அங்கு இருந்து மின் வினியோகம் பெறும் மானூர், மாவடி, தெற்குபட்டி, களக்குடி, எட்டாங்குளம், கானார்பட்டி, பிள்ளையார்குளம், குறிச்சிகுளம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது. இந்த தகவலை, நெல்லை கிராமப்புற மின் வினியோக செயற்பொறியாளர் ஜான் பிரிட்டோ தெரிவித்துள்ளார்.