கணவனுடன் ஏற்பட்ட குடும்ப தகராறில் மனைவி தற்கொலை செய்து கொண்டது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
கோயம்புத்தூர் மாவட்டம் அன்னூரை சேர்ந்தவர் மனோகரன் கவிதா தம்பதியினர். இத்தம்பதியருக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர். கடந்த சில தினங்களாக கணவன்-மனைவிக்கிடையே குடும்பப் பிரச்சினைகள் காரணமாக தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மனைவி கவிதா மிகுந்த வருத்தத்துடன் காணப்பட்டுள்ளார்.
சம்பவத்தன்று கணவனுடன் ஏற்பட்ட தகராறில் மன விரக்தி அடைந்த கவிதா வீட்டில் இருந்த பொழுது தூக்கு மாட்டிக் கொண்டார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த மகன் தந்தை மனோகரனுக்கு தகவல் அளிக்க மனோகரன் விரைந்து வந்து மனைவியை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு சிகிச்சை அளித்தும் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார் கவிதா. இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.