நீயா நானாவில் மனைவியால் மட்டம் தட்டப்பட்ட அப்பாவின் வீடியோவை பகிர்ந்து உருகியுள்ளார் விக்னேஷ் சிவன்.
சென்ற வாரம் ஞாயிற்றுக்கிழமை விஜய் டிவி ஒளிபரப்பான நீயா நானாவில் மனைவியால் மட்டம் தட்டப்பட்ட அப்பாவின் வீடியோவை பகிர்ந்து உருக்கமாக பதிவிட்டுள்ளார் விக்னேஷ் சிவன். சென்ற ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பான நீயா நானாவில் சீனி ராஜாவின் என்பவரின் மனைவி அவரை மட்டம் தட்டுகின்றார். சீனி ராஜாவின் மனநிலையை புரிந்து கொண்ட கோபிநாத் மகள் கையாளே பரிசு படுக்க வைத்தார்.
மேலும் அந்த பெண்ணிற்கும் அறிவுரை கூறினார். பின்னர் மகளிடம் இவர் தான் சூப்பர் டாடி என பாராட்டி பேசினார். எமோஷனலாக நடந்த இந்த வீடியோவை சென்ற ரெண்டு நாட்களாக திரை பிரபலங்கள் பலரும் இணையத்தில் பகிர்ந்து வருகின்றார்கள். அந்த வகையில் விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோவை பகிர்ந்து மகள்களை பெற்ற அப்பாக்களுக்கு மட்டுமே தெரியும், முத்தம் காமத்தில் சேர்ந்ததன்று என குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார்.
❤️❤️❤️❤️❤️ மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டுமே தெரியும் முத்தம் காமத்தில் சேர்ந்ததன்று ❤️😍😍😇😇 https://t.co/AR4Z9pHaV3
— VigneshShivan (@VigneshShivN) September 12, 2022