தமிழக அரசு பள்ளி மாணவர்களுடைய நலனில் அக்கறை காட்டி வருகிறது. ஊட்டச்சத்து குறைபாட்டை போக்கவும் கற்றல் இடைவெளியை தவிர்க்கவும் அரசு தொடக்கப்பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகளுக்கு முதல் கட்டமாக காலையில் சத்தான சிற்றுண்டி வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்தார். மேலும் அதற்கான அரசனை மற்றும் வழிகாட்டு நெறிமுறை வெளியிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை நாளை தொடங்கி வைக்கிறார் முதல்வர்.
அதன் பிறகு நாளை மறுநாள் இந்த காலை உணவு திட்டம் அனைத்து மாவட்டங்களிலும் சம்பந்தப்பட்ட கலெக்டரால் தேர்வு செய்யப்பட்டுள்ள பள்ளிகளிள் ஏதாவது ஒரு பள்ளியை தேர்வு செய்து அங்கு அமைச்சர் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் கொண்டு திட்டத்தை தொடங்கப்பட உள்ளது.