அமெரிக்காவை மையமாக தலைமையிடமாக கொண்டு செயல்படக் கூடிய மிகப்பெரிய நிறுவனமான காக்னிசன்ட் நிறுவனம் சில நாட்களுக்கு முன்பு 12,000 பேருக்கு வேலை இழப்பு செய்தது. அதில் 5 ஆயிரம் பேரை மீண்டும் வேலையில் சேர்த்த நிலையில் 7,000 பேருக்கு வேலை கிடையாது வீட்டுக்கு போங்க என்று சொல்லி இருந்தார்கள் . ஐ.டி. நிறுவனங்களில் முன்னணி வகிக்கும் இன்ஃபோசிஸ் ஆசியாவின் இரண்டாவது மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனமாகும். உலகில் பல்வேறு நாடுகளில் கிளை பரப்பியுள்ளது.
இந்நிலையில் இன்போசிஸ் நிறுவனம் தன்னுடைய ஊழியர்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. அதன்படி இன்போசிஸ் ஊழியர்கள் தங்கள் வேலை நேரத்திலோ அல்லது வேலை நேரத்திற்கு பிறகோ வேறு நிறுவனத்திற்கு பணி செய்தால் உடனே பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. கொரோனா ஊரடங்கின் போது வீட்டில் இருந்து பணியாற்றிய ஊழியர்கள் பகுதி நேரமாக வேறு நிறுவனங்களுக்கும் பணியாற்றியதாக வந்த புகாரின் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.