Categories
தேசிய செய்திகள்

திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்…. இனி ஜாலியா போகலாம்…. சூப்பர் அறிவிப்பு….!!!

திருப்பதியில் வருகின்ற செப்டம்பர் 17ஆம் தேதி பிரம்மோற்சவ விழா நடைபெற உள்ளது. இந்த விழா வருகின்ற அக்டோபர் மாதம் ஐந்தாம் தேதி வரை நடைபெற உள்ளதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது. கொரோனா காரணமாக இரண்டு வருடங்களுக்குப் பிறகு மாட வீதிகளில் பிரம்மோற்சவ விழா வாகன சேவை நடத்தப்பட உள்ளது.

இந்நிலையில் பக்தர்களின் வசதிக்காக 300 சிறப்பு பேருந்துகளை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக திருப்பதி மற்றும் திருமலை இடையே மின்சார பேருந்துகள் சேவையும் தொடங்கப்பட உள்ளது. இந்த மின்சார பேருந்து 36 இருக்கைகளுடன் குளிர்சாதன வசதியும் உள்ளது. இந்த பேருந்தில் சிசிடிவி கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன.ஒரு முறை சார்ஜ் செய்தால் 300 கிலோ மீட்டர் தூரம் வரை பேருந்து இயக்க முடியும்.இந்த புதிய மின்சார பேருந்து தற்போது திருமலைக்கு வந்துள்ளது.இந்த சேவையை பிரம்மோற்சவ விழா அன்று ஆந்திர மாநில முதல்வர் தொடங்கி வைக்க உள்ளார்.

Categories

Tech |