மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார், முதல்வர் ஸ்டாலின் சொல்கிறார் AM, PM பார்க்காத CM. அது கூட இல்லை, நான் வந்து நிமிடத்திற்கு நிமிடம் உழைக்கும் முதலமைச்சர் என்று சொல்லுகிறார். நிமிடத்திற்கு நிமிடம் விழா நடக்கிறது. மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் விழா நாயகனாக இருக்கிறார், ஆனால் விழாவில் பங்கேற்கின்ற பயனாளிகளுக்கு என்ன பயன் கிடைத்தது ? என்று அங்கு இருக்கின்ற பயனாளிகள் இடத்திலே நீங்கள் கேட்டீர்கள் என்றால் உண்மை வெட்ட வெளிச்சமாகும்.
ஆகவே விழா நாயகனாகத்தான் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஊர்வலம் வந்து கொண்டிருக்கிறார், நகர்வலம் வந்து கொண்டிருக்கிறாரே தவிர, மக்களினுடைய வளர்ச்சிக்காக எந்த திட்டங்களையும் அவர் பட்டியலிட்டு சொல்ல முடியாது. ஏற்கனவே இருந்த திட்டங்களின் பெயரை மாற்றி, ரத்து செய்து, மாண்புமிகு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடியார் அவர்கள் அன்னைத் தமிழகம் மக்களுடைய வளர்ச்சிக்காகவும், எதிர்காலத்திற்காக, தொலைநோக்கு சிந்தனையோடு அண்ணன் அவர்கள் கொடுத்திருக்கின்ற திட்டங்கள் இன்றைக்கு ரத்து செய்யப்பட்டதற்கு வேறு பெயர் கொடுக்கப்பட்டுள்ளது.
அல்ல அல்ல குறையாத அமுத சுரப்பியாக, அட்சய பாத்திரமாக இருந்த அம்மா உணவகம் இன்றைக்கு எப்படி இருக்கிறது என்று நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள் ? ஆகவே இது தான் இந்த ஆட்சியாளர்களுடைய எண்ணம், அவருடைய தந்தையார் பெயரிலே நினைவு சின்னம் அமைப்பது, அதில் அவர் காட்டுகின்ற அக்கறையை மற்ற திட்டங்களுக்கு காட்ட வேண்டும்.
இன்றைக்கு டிஜிட்டல் உலகம். உள்ளங்கையில் உலகத்தை கொண்டு வரும் டிஜிட்டல் உலகத்திலே.. வீட்டிலிருந்து அனைத்து நூலகத்தையும் கூகுளில் போனால் எல்லா நூலகத்தையும் விவரங்களையும் நாம் பெற முடியும். ஆனால் இன்றைக்கு அவருடைய தந்தையார் பெயரை நிலை நிறுத்துவதற்காக அவர் எடுத்திருக்கின்ற முயற்சி, அவர் காட்டுகின்ற அக்கறை, இந்த எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு ஒரு முறை கூட அவர் நேரில் சென்று ஆய்வு செய்வதற்கு ஆர்வம் காட்டவில்லை என விமர்சித்தார்.