இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தி உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த புதிய வட்டி விகிதங்கள் செப்டம்பர் 13ஆம் தேதி முதல் அமலுக்கு.ரிசர்வ் வங்கி அண்மையில் ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்திய நிலையில் பல்வேறு வங்கிகளும் பிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தி வருகின்றன.அந்த வரிசையில் தற்போது இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது.
புதிய வட்டி:
3 – 29 நாட்கள் : 3.25%
30 – 45 நாட்கள் : 3.35%
46 – 90 நாட்கள் : 3.75%
91 – 120 நாட்கள் : 4.1%
121 – 179 நாட்கள் : 4.1%
270 நாட்கள் : 4.65%
1 ஆண்டு – 2 ஆண்டு : 5.5%
2 ஆண்டு – 3 ஆண்டு : 5.65%
1000 நாட்கள் : 5.60%
ஸ்பெஷல் ஃபிக்சட் டெபாசிட்:
444 நாட்கள் : 5.65%