Categories
அரசியல் மாநில செய்திகள்

BJP கூட்டணியில் DMDK தொடருமா..! பிரேமலதா விஜயகாந்த் அதிரடி அறிவிப்பு..!

தேமுதிக தொடங்கி 18ஆம் ஆண்டு தொடக்க விழாவில் செய்தியாளர்களை சந்தித்த தேமுதிகவின் பொருளாளர் பிரேமலதாவிடம், இந்த கட்சி எதற்காக தொடங்கப்பட்டது, அதன் நோக்கம் நிறைவடைந்து விட்டதா ? என்ற கேள்விக்கு எங்களுடைய பயணம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. நிச்சயமாக எந்த நோக்கத்திற்காக ஆரம்பிச்சமோ அதை அடைவோம் என்று தான் இந்த நல்ல நாளில் உங்களுக்கு உறுதியாக சொல்கின்றேன்.

2024ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் மக்களவை தேர்தலுக்கு எல்லா கட்சியும்  தயாராகிக்கொண்டு இருக்கும் நிலையில், தேமுதிக எப்படி தயாராகி கொண்டு இருக்கின்றது ? என்ற கேள்விக்கு, 2024 தேர்தலுக்கு தேமுதிகவும் தயாராகிக் கொண்டிருக்கிறது. தேமுதிகவில் உட்கட்சி தேர்தல் நடந்து கொண்டிருக்கின்றது. உட்கட்சித் தேர்தல் முடிந்தவுடன் வெகுவிரைவில் செயற்குழு,  பொதுக்குழு கூட்ட  இருக்கிறோம். அதுமட்டுமல்லாமல் மண்டல மாநாடுகள், பொதுக்கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், மக்களுக்கான பிரச்சினைகளை கையில் எடுப்பது என்று,

தேமுதிகவின் எல்லா பணிகளையும் நாங்கள்  முறையாக பிளான் பண்ணி இருக்கோம். அதன்படி நிச்சயம் எங்களுடைய பயணம் இருக்கும், வெகு விரைவில் அதற்கான அறிவிப்புகள் வரும். தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள கட்சிகள் எல்லாம் அப்படியே தான் இருக்கின்றது. அந்த கூட்டணியில் உள்ள கட்சிகளோடு தான் தேர்தலை சிந்திப்போம் என பாஜக நம்பிக்கை தெரிவிக்கின்றது, இதனை நீங்கள் எப்படி பாக்குறீங்க ? என்ற கேள்விக்கு, இப்போதைக்கு நாங்கள் எங்களுடைய கட்சி வளர்ச்சியையும்,  எங்களுடைய கட்சியை மட்டும் தான் நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றோம்.

எந்த கூட்டணியை பற்றி இந்த நேரத்தில் நாங்கள் எந்த ஒரு அறிவிப்போ, முடிவோ எடுப்பதற்கு இல்லை. ஏனென்றால் 2024 பாராளுமன்ற தேர்தல் வருவதற்கு இரண்டு ஆண்டுகள் இருக்கு. அதனால நிச்சயமாக அந்த நேரத்தில் தலைவர் அவர்களால் நல்ல முடிவு எடுத்து, அது மக்களுக்கு அறிவிக்கப்படும் என தெரிவித்தார்.

Categories

Tech |