தமிழக மாணவர்களின் கற்றல் இடைவெளியை சரி செய்யக்கூடிய வகையில் இல்லம் தேடி கல்வி திட்டம் கொண்டுவரப்பட்டது. இதன்மூலம் தன்னார்வலர்களை கொண்டு மாலை நேரங்களில் மாணவர்கள் கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது. தொடக்கக்கல்வி மாணவர்களுக்கு அடிப்படை எழுத்து மற்றும் கணித அறிவினை அளிக்கும் வகையில் எண்ணும் எழுத்தும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் 1 முதல் 3 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு எழுத்து மற்றும் எண்கள் கற்பிப்பதை அரசு நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. பள்ளிகளில் மாணவர்கள் நல்ல ஒழுக்கத்தை கற்பிக்கும் வகையில் திறமைகளை மேம்படுத்தக்கூடிய வகையில் பாட வகுப்புகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து கடந்த வாரம் முதல்வர் ‘டெல்லி மாடல் பள்ளி’ என்னும் திட்டத்தை துவக்கி வைத்துள்ளார்.
இந்நிலையில் பள்ளி மாணவர்கள் நல்வழிப்படுத்த சிற்பி என்னும் திட்டம் தொடங்கபட்டுள்ளது. இந்த திட்டத்தை இன்று காலை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் துவக்கி வைத்துள்ளார். இந்த சிற்பி திட்டமானது காவல்துறையினரின் முயற்சிகளில் மாணவர்களை ஈடுபடுத்தக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. முதலில் சென்னை பெருநகர காவல் மூலமாக திட்டம் செயல்படுத்தப்படுவது. இந்த திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்த ஒருங்கிணைப்பு அதிகாரிகளும் நியமிக்கப்பட உள்ளனர். சிற்பி திட்டத்தில் இணையும் மாணவர்களுக்கு சீருடைகளும் வழங்கப்பட்டுள்ளது. தற்போது தமிழக பள்ளிகளில் இருக்கும் தேசிய மாணவர் படைத்திட்டம் போல இந்த திட்டம் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த திட்ட மாணவர்களுக்கு சமூக பொறுப்பாளர்களாக மாற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சிற்பி திட்டம் மாணவர்களின் பெற்றோர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.