Categories
உலக செய்திகள்

நைஜீரியாவில் ஒரே சமயத்தில் 2 கிராமங்களில் தாக்குதல்: 30 பேர் உயிரிழப்பு!

நைஜீரியாவில் வடக்கு மாகாணமான காட்சினாவில் உள்ள 2 கிராமங்களுக்குள் போகோஹரம் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில், 30பேர் உயிரிழந்துள்ளனர்.

நைஜீரியாவில் வடக்கு மாகாணமான காட்சினாவில் உள்ள 2 கிராமங்களுக்குள் போகோஹரம் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில், 30பேர் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்த நிலையில், அவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக இத்தாக்குதல் சிறுவர்கள் மற்றும் முதியவர்களை குறிவைத்து நடத்தப்பட்டதாக கூறப்படுகின்றது.

2 கிராமங்களிலும் போலீஸ் பாதுகாப்பை மீறி இந்த தாக்குதல் நடந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த புதன்கிழமை கதுனா மாகாணத்தில் உள்ள பகாலி என்ற கிராமத்துக்குள் பயங்கரவாதிகள் புகுந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 21 பேரை உயிரோடு தீவைத்து எரித்து கொன்றது  குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |