மராட்டிய மாநிலம், லத்தூர் மாவட்டத்தில் கில்லாரியில் இருந்து 28 கி.மீ தொலைவில் உள்ளது ஹசோரி கிராமம். கடந்த செப்டம்பர் 6ஆம் தேதி முதல் இந்த கிராமத்தில் பூமிக்கு அடியில் இருந்து மர்மமான சத்தம் கேட்பதாக கிராம மக்கள் அச்சமடைந்து வந்துள்ளனர். இதையடுத்து மாவட்ட அதிகாரிகள் இந்திய புவி காந்தவியல் நிறுவனத்தின் நிபுணர்களை கிராமத்திற்கு சென்று ஆய்வு செய்யும் படி தெரிவித்தனர். அவர்கள் ஆய்வு செய்தபோது இந்த பகுதியில் எந்த நில அதிர்வும் பதிவாகவில்லை என்று தெரிவித்துள்ளனர்.
இதே பகுதியில் 1993 ஒரு பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டு 9700-க்கும் அதிகமான உயிரிழப்புகள் ஏற்பட்டது. மாவட்ட கலெக்டர் பிரித்திவிராஜ் நேற்று இந்த மாவட்டத்திற்கு சென்று மக்கள் பீதி அடைய வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்தனர். இருப்பினும் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.