நாக்கில் எச்சி ஊறவைக்கும் மனம் மற்றும் ருசி.. நெத்திலி கருவாட்டு குழம்பு:
தேவையான பொருட்கள்:
நெத்திலி – 300கிராம்
புளி – எலுமிச்சை அளவு
சின்ன வெங்காயம் – 9
தக்காளி – 3
பூண்டு – 7அரிசி
மிளகாய்த் தூள் – 2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
மஞ்சள் தூள் – 1டீஸ்பூன்
தாளிப்பதற்கு:
கடுகு,
வெந்தயம்,
சீரகம்,
கறிவேப்பிலை
செய்முறை:
நெத்திலியின் தலையையும், வாலையும் கிள்ளிவிட்டு தண்ணீரில் 5 நிமிடம் ஊற வைக்கவும். 5 முறை நன்றாக அலசி எடுத்து கொள்ளுங்கள். கைகளை அதிகமாக போட்டு கருவாட்டை அலச கூடாது. அவ்வாறு செய்தால் கருவாடு சாப்பிட ஆகாத அளவுக்கு போய்விடும்.
புளியை நன்கு கரைசலாக ஆக்கி, அதில் 2 டீஸ்பூன் மிளகாய்த்தூள், உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து கலந்து வைத்து கொள்ளுங்கள். வெங்காயம், தக்காளி, பூண்டை நறுக்கிக் கொள்ளவும்.
பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும், கடுகு, வெந்தயம், சீரகம், கறிவேப்பிலை போட்டு தாளித்து, பின் சின்ன வெங்காயம் போட்டு பொன்னிறமாக வதக்கவேண்டும். பின்னர் பூண்டு, தக்காளி போட்டு வதக்கவும்.