பொதுவாக விமானத்தில் விமானிகள் மற்றும் பணிப்பெண்களுக்கு சுவாச மது பரிசோதனை செய்யப்படுவது வழக்கம். ஆனால் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா பரவல் தீவிரமாக பரவி வந்ததால் பரிசோதனை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் கொரோனா பரவல் குறைந்து வருவதால் சுவாச பரிசோதனை திரும்பவும் அமலாகிறது.
அதன்படி அக்டோபர் 15ஆம் தேதி முதல் விமானிகள் மற்றும் பணிப்பெண்களுக்கு சுவாச மது பரிசோதனை திரும்பவும் அமலுக்கு வருவதாக விமான போக்குவரத்து ஆணைய இயக்குனர் அறிவித்துள்ளார். கடந்த 2020 மார்ச்சில் ஸ்பைஸ் ஜெட் விமானி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து இந்த சுவாச பரிசோதனை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.