Categories
தேசிய செய்திகள்

பென்ஷன் பற்றிய கவலையா….? உடனே அத விடுங்க…. உங்களுக்கான சூப்பர் திட்டம் இதோ….!!!!

பொதுவாக அனைத்து மக்களுக்கும் தங்களுடைய பணிக்காலம் முடிவடைந்த பிறகு நிலையான  ஓய்வூதியம் வர வேண்டும் என்று விரும்புவார்கள். இந்த ஓய்வூதிய பலன்கள் அரசு துறையில் வேலை பார்ப்பவர்களுக்கு தானாகவே கிடைத்து விடும். ஆனால் தனியார் நிறுவனங்களில் வேலை பார்க்கும் நபர்கள் தங்களுடைய ஓய்வுக்கு பிறகு ஒரு நிலையான வருமானத்தை ஈட்ட வேண்டும் என்ற கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறார்கள்.

இதன் காரணமாக தனியார் துறை ஊழியர்கள் ஒரு சரியான பென்ஷன் திட்டத்தில் முதலீடு செய்வது என்பது அவசியமான ஒன்றாகும். இப்படி நிலையான பென்சன் திட்டத்தில் முதலீடு செய்து பயன்பெற விரும்பும் தனியார் ஊழியர்களுக்காக ஒரு சூப்பர் பென்ஷன் திட்டம் இருக்கிறது. அதாவது தேசிய பென்ஷன் திட்டம் என்பது ஒரு நல்ல தீர்வாக இருக்கும்.

இது முதலில் அரசு ஊழியர்களுக்கு மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், சில வருடங்களுக்கு பிறகு தனியார் ஊழியர்களும் இணைந்து பயன் பெறலாம் என்று அறிவிக்கப்பட்டது. நீங்கள் இளம் வயது முதலே செலுத்தும் பணம், பங்குகள் மற்றும் பத்திரங்கள் போன்றவற்றில் முதலீடு செய்யப்படும். நீங்கள் சரியான புரிதலோடு தேசிய பென்ஷன் திட்டத்தில் முதலீடு செய்தால் 50,000 ரூபாய் வரை மாதம் பென்ஷன் தொகையாக பெற முடியும்.

Categories

Tech |