Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மாணவர் குத்தி கொலை…. செல்போனை பறிக்க முயன்ற வாலிபர்கள் வெறிச்செயல்

செல்போன் பறிக்க முயற்சி செய்து முடியாத காரணத்தினால் மாணவனை கத்தியால் குத்தி மாணவர்கள் இவர்கள் வாலிபர்கள்

கோவை மாவட்டம் அரசூர் சடையன் தோட்டத்தை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் இவர்  தனியார் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். படிப்பு  தொடர்பாக அரசூர் வரை சென்றிருக்கிறார். வேலை முடிந்து நள்ளிரவு 12 மணியளவில் வீட்டிற்கு திரும்பியுள்ளார்.

தமிழ்ச்செல்வன் சரவனம்பட்டி ரோடு சட்டம் அருகே அவர் வந்து கொண்டிருந்த பொழுது அவரின் பின்னால் மோட்டார் சைக்கிள் மற்றும் மொபட்டில் பின்தொடர்ந்து வந்த மூவர் தமிழ்ச்செல்வனை வழிமறித்து அவரது செல்போனை பறிக்க  முயற்சித்துள்ளனர். இதனால் தமிழ் செல்வத்திற்கும் 3 வாலிபருக்கும் கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த வாலிபர்கள் மறைத்துக் கொண்டு வந்த கத்தியினால் தமிழ்ச்செல்வனை குத்தியுள்ளனர்.

இதில் தமிழ்செல்வன்  ரத்த வெள்ளத்தில் சரிந்து விழ மூவரும் தப்பியோடியுள்ளனர். பின்னர் செல்போன் மூலம் தனது தந்தைக்கு தகவல் அளித்துள்ளார் தமிழ்ச்செல்வன். தகவலறிந்து அங்கு வந்த தந்தை தமிழ்ச்செல்வனை மருத்துவமனையில் அனுமதித்த பொழுது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இதுகுறித்து சூலூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

By inza dev

IF YOU WANT TO KNOW MEANS THEN TRY TO FIND ME AND ASK ME

Categories

Tech |