Categories
மாநில செய்திகள்

OMG: மெட்ரோ ரயிலில் ஒரே நாளில் 2.30 சதவீதம் பேர் பயணம்…. வெளியான தகவல்….!!!!

மெட்ரோ ரயில் நிறுவனம் அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளது.

மெட்ரோ ரயில் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் நமது சென்னை மாவட்டத்தில் வசிக்கும் மக்களுக்கும், வேறு மாவட்டங்களில்  சென்னைக்கு வரும் பயணிகளுக்கும் பாதுகாப்பான போக்குவரத்து வசதியை எங்கள் நிறுவனம் அளித்து வருகிறது. இதனால்  பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிக அளவில் உயர்ந்து வருகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் மட்டும்  2 லட்சத்து 30 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பயணம் செய்தனர். அதேபோல் புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி. ராமச்சந்திரன் ரயில்  நிலையத்திலிருந்து 21  ஆயிரத்து 419 பயணிகளும், திருமங்கலம்  ரயில் நிலையத்திலிருந்து 11 ஆயிரத்து 189 பயணிகளும், கிண்டி ரயில் நிலையத்திலிருந்து 10 ஆயிரத்து 599 பயணிகளும் பயணம் செய்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |