தமிழகத்தில் பாஜக கட்சியின் தலைவராக அண்ணாமலை கடந்த 2021-ம் ஆண்டு ஜூலை மாதம் நியமிக்கப்பட்டார். இவர் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ஆவார். இவர் பாஜக மாநில தலைவராக பொறுப்பேற்றதில் இருந்து திமுக அரசை கடுமையாக விமர்சித்து வருகிறார். அதோடு அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோரை விடாமல் துரத்துகிறார்.
இந்நிலையில் பாஜக மாநில தலைவர் மீது கட்சியின் மூத்த தலைவர்கள் கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. அதாவது அண்ணாமலை மாநில தலைவராக பொறுப்பேற்றதிலிருந்து மூத்த தலைவர்கள் யாரையும் மதிப்பது கிடையாதம். அவர்களிடமிருந்து எந்த ஒரு ஆலோசனையையும் கேட்பது கிடையாது, தான் சொல்வது மட்டும் தான் சரி என்ற விதத்தில் நடந்து கொள்கிறாராம்.
இதனால் மூத்த தலைவர்கள் செம கடுப்பில் இருக்கின்றனர். இது தொடர்பாக மூத்த தலைவர்கள் சிலர் கூறும்போது, அண்ணாமலை பத்திரிகையாளர்களை மதிப்பது கிடையாது. அதேபோன்று மூத்த தலைவர்களையும் சுத்தமாக மதிப்பதே கிடையாது. கட்சிக்காரர்கள் அனைவரையும் சந்தேக கண்ணோட்டத்துடன் தான் பார்க்கிறார். ஏன் அவருடைய டிரைவரை கூட சந்தேகத்துடன் தான் பார்க்கிறார். பாஜக கட்சியின் மாநில தலைவர் பதவியை கொடுத்ததன் காரணமாக வேறு வழி இன்றி அவரை அட்ஜெஸ்ட் செய்து கொண்டார்கள்.
அது மட்டுமா சுற்றுப்பயணம் மேற்கொள்வது பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்வது போன்ற நடவடிக்கைகள் மட்டும்தான் ஈடுபடுகிறார். கட்சிக்காரர்களை மதிப்பதே கிடையாது. இதனால் கட்சிக்காரர்கள் அனைவரும் அண்ணாமலை மீது கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறியுள்ளனர். மேலும் அண்ணாமலை மீது டெல்லியில் புகார்கள் குவிந்த வண்ணமாக இருக்கிறது என்றும், கூடிய விரைவில் அவர் மீது நடவடிக்கை எடுக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.