மனைவியின் நடத்தையில் சந்தேகம் கொண்டு மனைவியின் தலையில் கல்லைப் போட்டு கொன்ற கணவர்
கடலூர் மாவட்டம் பண்ருட்டி சேர்ந்தவர் குமரவேல் இராஜேஸ்வரி தம்பதியினர். இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். கடந்த சில தினங்களாக கணவன்-மனைவி இடையே குடும்ப தகராறினால் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று முன்தினம் வழக்கம் போல் பிரச்சினை ஏற்பட்டுள்ளது இதனால் கோபம் கொண்ட கணவர் குமரவேலு மனைவியை கொல்ல நினைத்தார். எனவே இரவில் குழந்தைகள் தூங்கிய பின்னர் இரும்பு கம்பி ஒன்றால் ராஜேஸ்வரியின் தலையில் அடித்துள்ளார். இதில் ராஜேஸ்வரி உயிருக்கு போராடிய நிலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். இருந்தும் கோபம் தீராத குமாரவேல் வீட்டிலிருந்து ஆட்டு உரல் கல்லை எடுத்து ராஜேஸ்வரியின் தலையில் போட்டுள்ளார். இதில் தலைசிறந்த ராஜேஸ்வரி இறந்தார்.
அதன் பின்னர் இரவு வேளையிலேயே குழந்தைகளை அழைத்துக்கொண்டு தலைமறைவாகிவிட்டார் குமரவேலு.
வீட்டிலிருந்து ரத்தம் வழிந்ததை கண்ட அக்கம் பக்கத்தினர் சந்தேகம் கொண்டு காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் விரைந்து வந்த காவல்துறையினர் சம்பவ இடத்தை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் ராஜேஸ்வரிக்கு பல ஆண்களுடன் கள்ள தொடர்பு இருந்ததாகவும், காதலர் தினத்தன்று ராஜேஸ்வரி வெளியில் சென்று வந்ததாகவும், இது தெரிந்து குமரவேலு எச்சரிக்க இதனால் குடும்ப பிரச்சனை எழுந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து குமரவேலு மனைவி ராஜேஸ்வரி கொலை செய்துள்ளார் என்பதும் காவல்துறையினருக்கு உறுதி செய்யப்பட்டு தலைமறைவான குமரவேலுவை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.