கோவை கண்ணார்பாளையம் என்னுமிடத்தில் பிரபாகரன் என்பவர் தந்தை பெரியார் உணவகம் என்ற பெயரில் ஹோட்டல் ஒன்றை புதிதாக இன்று திறக்க திட்டமிட்டு இருந்தார். அதற்கான பணிகளில் நேற்று மாலை தொழிலாளர்களுடன் ஈடுபட்டு வந்துள்ளார். அப்பொழுது அங்கு வந்த ஒரு கும்பல் தாக்குதல் நடத்தி கடையை சூறையாடி அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.
இந்த தாக்குதலில் அங்கு பணியில் இருந்த அருண்(21) என்பவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து பிரபாகரன் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், தாக்குதலில் ஈடுபட்ட இந்து முன்னணி அமைப்பை சேர்ந்த ரவிபாரதி,சரவணகுமார், சுனில், விஜயகுமார், பிரபு, பிராபகரன் ஆகிய 6 பேரை கைது செய்தனர்.