Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

” Happy Birthday Sky”…. இன்ஸ்டாவில் வாழ்த்து சொன்ன கிங் கோலி…!!

இந்திய நட்சத்திரம் விராட் கோலி 32வது பிறந்தநாளை முன்னிட்டு தனது சக வீரர் சூர்யகுமார் யாதவுக்கு சமூக வலைதளத்தில் வாழ்த்து தெரிவித்தார். 

இந்தியாவின் மிஸ்டர் 360 டிகிரி என அழைக்கப்படும் சூர்யகுமார் யாதவ் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவரது பிறந்தநாளை முன்னிட்டு கிரிக்கெட் வீரர்கள் உட்பட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில்  செப்.14, புதன்கிழமை அன்று 32 வயதை எட்டிய நட்சத்திர பேட்டர் சூர்யகுமார் யாதவுக்கு முன்னாள் இந்திய கேப்டன் விராட் கோலி பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தார். கோலி தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சூர்யகுமாருக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்துகளை பதிவு செய்தார்.

சூர்யகுமார் தற்போது இந்தியாவின் முதல் டி20 பேட்டராக உள்ளார் மற்றும் அவரது ஆக்ரோஷமான மற்றும் தந்திரமான பேட்டிங் பாணிக்கு பெயர் பெற்றவர். கோலி மற்றும் சூர்யகுமார் இருவரும் ஒருவருக்கொருவர் தங்கள் அபிமானத்தைப் பகிர்ந்து கொண்டனர் மற்றும் இந்தியாவுக்காக பல முக்கியமான ஆட்டங்களை ஒன்றாக விளையாடியுள்ளனர்.

முன்னதாக ஐபிஎல் 2020 இன் போது, ​​ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் மும்பை இந்தியன்ஸ் இடையேயான முக்கியமான போட்டியின் போது விராட் கோலி சூர்யகுமார் யாதவை மிரட்ட முயன்றார். அப்போது பீல்டிங் செய்து கொண்டிருந்த கோலி பந்தைப் பிடித்து யாதவை நோக்கி நடக்கத் தொடங்கினார். மும்பை பேட்டர் சூர்யாவும்  அசையவில்லை மற்றும் கோலியும் கண்களால் மிரட்டினார். இருவரும் அந்த போட்டியில் முறைத்தபடியே இருந்தனர். இருப்பினும், அந்த ஐபிஎல் 2020 சம்பவத்திலிருந்து விஷயங்கள் அப்படியே முற்றிலும் மாறிவிட்டன.

ஆம் சமீபத்தில், ஆசியக்கோப்பையில் ஹாங்காங்கிற்கு எதிராக புதன்கிழமை சூர்யகுமாரும், கோலியும் இணைந்து ஆடினர். கிங் கோலி இந்த ஆட்டத்தில் அற்புதமாக ஆடி 44 பந்துகளில் 59 ரன்கள் (3 சிக்ஸர், 1 பவுண்டரி) எடுத்தார். மேலும்  அபாரமாக ஆடிய சூர்யகுமார் யாதவ் 6 சிக்சர் 6 பவுண்டர்கள் என  26 பந்துகளில் 68 ரன்களை விளாசி தள்ளினார். இதையடுத்து போட்டி முடிந்த பின் பெவிலியனை நோக்கி சூர்யகுமார் சென்றபோது, விராட் கோலி தனது நெஞ்சில் கையை வைத்து அவருக்கு சிரம் தாழ்த்தி வணங்கி கை கொடுத்து மரியாதை செய்தார். உலகின் தலைசிறந்த வீரரான கோலி வளர்ந்து வரும் சூர்யகுமாருக்கு மரியாதை கொடுத்த இந்த வீடியோ சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி பாராட்டுக்களை பெற்றது.

இதையடுத்து BCCI.tv க்காக சூர்யகுமாருடனான உரையாடலின் போது, ​​”SKY ஒரு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார், அதை நான் மறுமுனையில் இருந்து முழுமையாக ரசித்தேன்” என்று கோஹ்லி கூறினார். மேலும் அவர் நாங்கள் ஐபிஎல்லில் [ஒருவருக்கொருவர் எதிராக] விளையாடும் போது அல்லது மற்ற அணிகளுக்கு எதிராக இப்படி விளையாடும் போது பல இன்னிங்ஸை நான் பார்த்திருக்கிறேன், ஆனால் அவர் அருகில் நின்று அவரது ஆட்டத்தை பார்த்து ரசிப்பது இதுவே முதல்முறை..

இது எனது முதல் அனுபவமாக இருந்தது. நான் முற்றிலும் அதிர்ச்சியடைந்தேன். நான் உண்மையாக நம்புகிறேன் இன்று நீங்கள் விளையாடிய விதம், உலகில் உள்ள எந்த அணிக்கு எதிராகவும் அதிரடி ஆட்டத்தை ஆட முடியும் என்று தெரிவித்தார்..

Categories

Tech |