தமிழகத்தில் நாளுக்கு நாள் விலைவாசி உயர்வு காரணமாக பொதுமக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறது.இதனிடையே அரசு பல நலத்திட்டங்களை கொண்டு வந்தாலும் மற்றொரு பக்கம் சொத்து வரி உயர்வு மற்றும் மின் கட்டண உயர்வு என மக்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.அண்மையில் சென்னையில் உள்ள கட்டிடங்கள் மற்றும் குடியிருப்புகளுக்கு சொத்து வரி உயர்த்தப்பட்டது. இந்த சொத்து வரி உயர்வு ஆண்டு மதிப்பு மற்றும் சொத்து அமைந்துள்ள தெருவின் மதிப்பு அடிப்படையில் உயர்த்தப்பட்டுள்ளது.
சொத்துவரி உயர்வை நினைத்து மக்கள் வருத்தத்தில் இருந்த நிலையில் தற்போது இந்த மாதத்தில் இருந்து புது மின்கட்டண உயர்வு அவளுக்கு வருவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.இந்நிலையில் சொத்து வரி உயர்த்தப்பட்டதை தொடர்ந்து குடிநீர் வரையும் உயர்த்தப்படுவது வழக்கம். அவ்வகையில் சொத்து வரி எந்த அளவிற்கு உயர்த்தப்பட்டதோ அதைவிட ஏழு சதவீதம் குடிநீர் வரி உயர்த்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் கடந்த 10 ஆண்டுகளாக குடிநீர் வரி உயர்த்தப்படாமல் உள்ளது. இந்நிலையில் உயர்த்தப்பட்ட குடிநீர் வரி குறித்து எஸ் எம் எஸ் மூலம் பொது மக்களுக்கு தகவல் அனுப்பப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.