15-வது ஆசியகோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டியானது ஐக்கிய அரபு எமிரேட்சில் அண்மையில் நடைபெற்று முடிந்தது. இவற்றில் பாகிஸ்தானை இறுதிப்போட்டியில் வீழ்த்தி இலங்கை ஆசியகோப்பையை கைப்பற்றியது. ரோகித்சர்மா தலைமையிலான இந்திய அணியின் ஆட்டம் ஆசிய கோப்பையில் மோசமாக இருந்தது. பாகிஸ்தான், இலங்கையிடம் தோற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்தது. பல்வேறு திறமையான வீரர்கள் இருந்தும் ஆசியகோப்பையில் ஏற்பட்ட தோல்வி ஏமாற்றமளித்தது. இப்போட்டிக்கு முன் சுழற்சி முறையில் பல வீரர்களுக்கு பல்வேறு தொடர்களில் வாய்ப்பு கொடுக்கப்பட்டது.
அவற்றில் வெற்றி கிடைத்தது. எனினும் முக்கியமான ஆசியக்கோப்பையில் இந்திய வீரர்கள் சொதப்பிவிட்டனர். இதன் காரணமாக அணி கடும் விமர்சனத்துக்குள்ளாகி உள்ளது. 20 ஓவர் உலகக் கோப்பை போட்டி அடுத்த மாதம் நடைபெற இருப்பதால் அதற்குள் அணி மீண்டுமாக நல்ல நிலையை பெறுவது அவசியமாகும். உலகக் கோப்பைக்கு முன் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்காவுடன் இந்தியா 20 ஓவர் தொடரில் இந்தியஅணி ஆடுகிறது. இந்நிலையில் ஆசியகோப்பை போட்டியில் ஏற்பட்ட தோல்வி பற்றி இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) ஆய்வு மேற்கொண்டது.
கிரிக்கெட்வாரிய தலைவர் கங்குலி, செயலாளர் ஜெய்ஷா, தேர்வு குழுவினர் ஆகியோர் இந்த ஆய்வு கூட்டத்தில் கலந்துகொண்டனர். ஆசிய கோப்பையில் 7 -15-வது ஓவர் வரை அதாவது மிடில் ஓவரில் பேட்டிங் மிகவும் மெதுவாக இருந்தது. அதிரடி பேட்டிங் இல்லாததால் ரன்குவிப்பு இல்லாமல் போனது. இது தொடர்பாக இக்கூட்டத்தில் கவலை தெரிவிக்கப்பட்டது. உலககோப்பையில் இந்திய அணியானது சிறப்பாக விளையாட என்னென்ன முறைகளை கையாள்வது என்பது தொடர்பாகவும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
இக்கூட்டம் பற்றி கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் கூறியிருப்பதாவது “ஆசியகோப்பையில் ஏற்பட்ட மோசமான செயல்பாடு தொடர்பாக விவாதிக்கப்பட்டது. வெளிப்படையான பல்வேறு பிரச்சனைகள் இருக்கிறது. 20 ஓவர் உலககோப்பையில் அதனை மேம்படுத்த வேண்டிய விஷயங்கள் பற்றி கவனம் செலுத்தப்பட்டது. ஆசியகோப்பையில் 7 -15 ஓவர் வரை வீரர்கள் சிறப்பாக ஆடவில்லை. இது தொடர்பாகவும் இக்கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது. அணியின் தேவைக்கேற்றவாறு வீரர்களின் வரிசை மாற்றியமைக்கப்படும்” என்று அவர் கூறினார்.