Categories
சினிமா

“வெந்து தணிந்தது காடு படம்” வெளியாக தடையா?…. ஐகோர்ட் அதிரடி உத்தரவு….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவருக்கு இளம் பெண்கள், சிறுவர்கள் உள்ளிட்ட ஓர் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி உள்ளார். இவர் தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் “வெந்து தணிந்தது காடு” படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் கதாநாயகிகளாக கயாடு லோகர் மற்றும் சித்தி இட்னானி நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். வேல்ஸ் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் சார்பில் ஐசரி கணேசன் இப்படத்தை தயாரிக்கிறார். இந்த படம் நாளை தமிழகம் முழுவதும் 600க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதனால் ரசிகர்கள் இதனை விழா கோலமாக மாற்ற பல ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். இப்படத்தை தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கையுடன் ஆலியின் பிக்சர்ஸ் என்ற நிறுவனம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அந்த மனுவில், 2018 ஆம் ஆண்டு நடிகர் சிம்பு நடிக்க சூப்பர் ஸ்டார் என்ற பெயரில் படத்தை இயக்குவதற்கு இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதாகவும் இதற்கு முன்பணம் ரூ.2 கோடியே 40 லட்சம் வழங்கப்பட்டது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது எங்களிடம் கூறிய அதே கதையை வெந்து தணிந்தது காடு என்ற பெயரில் படமாக எடுத்து அதை நாளை வெளியிட இருப்பதாகவும் தங்களுக்கு தரவேண்டிய ரூ.2 கோடி 40 லட்சம் பணத்தை தராமல் இந்த படத்தை வெளியிடக்கூடாது. படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று அதில் அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தயாரிப்பு நிறுவன சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 2018 ஆம் ஆண்டு ஒப்பந்தத்தை மீறி எடுக்கப்பட்ட இந்த படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை முன்வைத்தார்.

அதே நேரத்தில் கவுதம் வாசுதேவ் மேனன் தலைப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஒப்பந்தம் போடப்பட்டது உண்மைதான் என்றும் அடுத்த படத்தை இயக்கும் முன்பாக மனுதாரருக்கு கொடுக்க வேண்டிய பணத்தை திருப்பி கொடுத்துவிடுவதாகவும் இது சம்பந்தமாக மனுதாரருடன் சமரசம் செய்து கொள்வதாகவும் தெரிவித்தார். இந்த சமரசம் செய்து கொள்வதற்காக மனுதாரர் தரப்பில் சம்மதம் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து இந்த பணத்தை திருப்பி கொடுப்பது குறித்த உத்தரவாதத்தை பதில் மனுவாக தாக்கல் செய்யும்படி கௌதம் மேனன் தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதி, இந்த மனு மீதான விசாரணை செப்டம்பர் 21 ஆம் தேதிக்கு தள்ளி வைத்திருக்கிறார். தற்போதைக்கு இந்த படத்துக்கு தடை ஏதும் விதிக்கப்படாத காரணத்தினால் நாளை இந்த படம் வெளியாவதில் எந்த ஒரு சிக்கலும் இல்லை என்று தெளிவாகிறது.

Categories

Tech |