தமிழகத்தில் தொற்றுப் பரவலுக்கு பிறகு நடப்பு கல்வி ஆண்டு பள்ளிகள் அனைத்தும் முழுமையாக திறக்கப்பட்டு மாணவர்கள் நேரடி வகுப்புகளுக்கு சென்று வருகின்றனர். மாணவர்களுக்கு சனிக்கிழமைகளில் வகுப்புகள் நடத்தக்கூடாது என தமிழக அரசு தெரிவித்திருந்தது. பல மாணவர்கள் மன அழுத்தத்தில் இருப்பதால் விடுமுறை நாட்களில் எந்த காரணத்தை கொண்டும் வகுப்புகள் நடத்தக்கூடாது என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்திருந்தார். ஆனால் அமைச்சரின் அறிவுறுத்தலுக்கு மாறாக தனியார் பள்ளிகளின் கோரிக்கையை ஏற்று தினமும் காலை மற்றும் மாலை வேலைகளில் பொது தேர்வு எழுதும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு மணி நேரம் சிறப்பு வகுப்புகளை நடத்திக் கொள்ளலாம் என்றும், விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்பு நடத்தலாம் என திருவள்ளுவர் மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர் அனுமதி வழங்கியுள்ளார்.
மாவட்ட கலெக்டர் மற்றும் தனியார் பள்ளி நிர்வாகிகளின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டதாக தெரிவித்தார். இது போன்று மற்ற மாவட்டங்களிலும் அறிவிப்புகள் வெளியாகி இருக்கலாம் என கூறப்படுகின்றது. எனவே இனி விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்பு நடத்துவதற்கான பணிகளை தனியார் பள்ளிகள் எடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.