நிடி ஆயோக் அமைப்புடன் இணைந்து 112 மாவட்டங்களில் உள்ள குழந்தைகளுக்கு ஆன்லைன் வாயிலாக இலவச கல்வி வழங்க பைஜூஸ் நிறுவனம் முடிவெடுத்து வழங்கி வந்தது. இந்தியாவிலேயே முன்னணி ஆன்லைன் கல்வி நிறுவனமாக பைஜூஸ் நிறுவனம் திகழ்கின்றது. இதன் மூலமாக பல மாணவ மாணவியர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.
இந்நிலையில் இந்தியாவின் முன்னணி ஆன்லைன் கல்வி நிறுவனமான பைஜூஸ், கடந்த ஓராண்டில் மட்டும் சுமார் பத்தாயிரம் கோடி வருவாய் ஈட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது கடந்த ஆண்டைவிட 4 மடங்கு அதிகம். டிஜிட்டல் கோச்சிங் முறையில் முன்னணியில் இருக்கும் பைஜூஸ், கொரோனா காலகட்டத்தில் அசுர வளர்ச்சியடைந்தது. நீட், ஜேஇஇ என நுழைவுத்தேர்வுகள் அதிகரிக்க அதிகரிக்க, அதை அடிப்படையாக கொண்டே தன் வணிக செயல்பாட்டை பெருக்கி இந்த அளவுக்கு வளர்ந்துள்ளது.