இந்திய ராணுவத்தில் உள்ள பெண் அதிகாரிகளுக்கு ஆண் அதிகாரிகளுக்கு இணையாக உத்தரவுகளை பிறப்பிக்கும் உயர் அதிகாரியாக பணியாற்ற அனுமதி அளித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ராணுவ நியமனத்தில் ஆண், பெண் பாகுபாடு பார்க்கப்படுவதாக மூத்த வழக்கறிஞர்கள் மீனாட்சி லேகி, ஐஸ்வர்யா பட்டி ஆகியோர் மத்திய அரசுக்கு எதிராக
உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். உயர்பதவியில் பெண்களை நியமக்க அனுமதிக்க வேண்டும் என்று அந்த மனுவில் கோரிக்கை விடுத்தனர். இந்த வழக்கின் விசாரணையில் மத்திய அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், குடும்பப் பராமரிப்பில் பெண்களின் பங்கு மிகவும் பெரியது.
ராணுவத்தில் அவர்களுக்கு ஆபத்து அதிகமாகவே உள்ளது. கிராமப்புற பின்னணியில் இருந்தே பெரும்பாலான ஆண்கள் ராணுவத்தில் சேர்கிறாரக்ள். தற்போதைய சமூக நடைமுறைக்கு ஏற்றறவாறு, பெண்களை தளபதிகளாக ஏற்றுக் கொள்ள மனதளவில் இன்னும் தயாராகவில்லை என்று கூறியது.
இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், பெண்களின் உடல் திறன்கள், தரவரிசை மற்றும் உளவியல் யதார்த்தங்கள் குறித்து மத்திய அரசு முன்வைத்த வாதங்களை நிராகரிக்கப்பட வேண்டும் என மனுதாரர்களான வழக்கறிஞர்கள் மீனாட்சி, ஐஸ்வர்யா தரப்பினர் வாதிட்டனர். மேலும் கடுமையான சூழ்நிலையில் பெண்கள் பலர் விதி விலக்காக இருந்துள்ளார்கள்.
விமானக் கட்டுப்பாட்டளராக விங் கமாண்டர் அபிநந்தன் இருந்த போது பாகிஸ்தானால் சுடப்பட்டார். அப்போது அவரை வழிநடத்தியது பெண் அதிகாரி மிண் அகர்வால். அதற்காக அவருக்கு யுத் சேவா பதக்கம் வழங்கப்பட்டது என்றும் மனுதாரர்கள் குறிப்பிட்டனர். இதற்கு பதில் அளித்த மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர் தொடர் இடமாற்றம், கடுமையான பணி சுமையால் பெண்கள் பாதிக்கப்படுவார்கள் இதனால் குழந்தை வளர்ப்பு, குடும்ப சூழல் போன்றவை பாதிக்கும் என வாதிட்டார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள் பெண்கள் குறித்த உங்களின் மன நிலை தான் மாற வேண்டும் என்று மத்திய அரசுக்கு அறிவுறுத்தினர். பெண்களின் உடலியல் அம்சங்களுக்கு அவர்களின் உரிமைகளுடன் எந்த தொடர்பும் இல்லை என்று கூறி ராணுவத்தில் பெண் அதிகாரிகளுக்கு கமாண்டர் பொறுப்பு வழங்க அனுமதி வழங்கி அதிரடியாக உத்தரவிட்டுள்ளனர். மேலும் 14 ஆண்டுகள் ராணுவத்தில் பணியாற்றிய பெண் அதிகாரிகளுக்கு உயர் பதவி வழங்கவேண்டும். ராணுவத்தில் பெண்களை நியமிப்பதற்கான உத்தரவை நிரந்தரமாக வேண்டும் எனவும், பாதுகாப்பு படையில் பெண்களுக்கும் நிரந்தர ஆணையம் வேண்டும் என்றும் உத்தரவை பிறப்பித்துள்ளனர்.