செய்தியாளர்களை சந்தித்த ராஜன் செல்லப்பா, மக்கள் விரோத திராவிட முன்னேற்றக் கழக அரசு, மின் கட்டணத்தை உயர்த்துவதால் பெருவாரியான மக்கள் பாதிக்கப்படுவார்கள். இந்த கட்டண உயர்வால் பாதிப்புக்கு உள்ளாகிற மக்கள் எந்த வகையிலும் நிச்சயமாக இந்த அரசை மனதார ஏற்றுக்கொள்ள முடியாத சூழ்நிலைதான் உருவாகி இருக்கிறது. வீட்டு வரியும் நூறு விழுக்காடு உயர்த்திருக்கிறார்கள். வீட்டு வரியை கட்டணத்தை குறைக்க வேண்டிய அவசியம் இருக்கின்றது.
எல்லா வகையிலும் இது மக்கள் விரோத நடவடிக்கையில் ஈடுபடுகின்றது.இந்த திமுக ஆட்சியில் ஒரே ஒரு திட்டம் இவர் கொண்டு வந்தார்கள். மகளிர்க்கு இலவச கட்டணம் இல்லாத பேருந்து. ஆனால் எல்லா பகுதியிலும், உபயோகமற்ற, பயனற்ற, ஆட்கள் ஏறாத பேருந்தில் மட்டுமே மகளிருக்கு இலவசம் என்ற செய்தி வருகிறது. மகளிர் இலவச பேருந்தில் எற இரண்டு மணி நேரம் காத்து, நாலு டீ குடிக்க வேண்டிய நிலையை தான் கிராமப்புற மக்களிடையே பார்க்க முடிகிறது. கிராமப்புற மகளிரும் சரி, நகரப்புற மகளிரும் சரி, அவர்களுக்கு இந்த இலவச பேருந்து என்பது இன்னலாக தான் இருக்கின்றது.
காத்து கிடக்க வேண்டிய சூழ்நிலை இருக்கிறது. ஆகவே மகளிருக்கு இலவச பேருந்தில் பெருத்த பயன் இருப்பதாக தெரியவில்லை. எந்த அளவிற்கு இலவசமாக பயணிக்கிறார்கள் என்பதை அறிந்து புள்ளி விவரத்தை காட்ட வேண்டும். பட்ஜெட்டில் மகளிருக்கு இலவச பேருந்து பயணத்திற்கு 703 கோடி ஒதுக்கீடு செய்தார்கள் . அந்த அளவிற்கு மகளிரின் இலவச பயணம் நடக்கிறதா? என தெரியவில்லை என தெரிவித்தார்.