பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கி வைக்கப்பட்ட காசி – மஹால் எக்ஸ்பிரஸ்ஸின் ஒரு இருக்கையில் கடவுள் சிவனுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
மத்திய பிரதேசம் மற்றும் உத்தரப்பிரதேச மாநிலங்களில் உள்ள ஓம்கரேஷ்வர் , மஹகளேஷ்வர் மற்றும் காசி விஸ்வநாதர் ஆகிய மூன்று ஜோதிலிங்க கோயில்களை இணைக்கும் ரயில் சேவையை நேற்று பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த நிலையில் அந்த ரயிலின் B 5 பெட்டிகள் பெட்டியில் 64வது சீட் சிவபெருமானின் சிறு கோயிலாக மாற்றப்பட்டுள்ளது.
இதில் கடவுள் படங்களை ஒட்டி மாலை அணிவித்து ரயில் ஊழியர்கள் வழிபாடு நடத்தினர். சிவபெருமானுக்காக இந்த சீட்டு முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் , இனிவரும் காலங்களில் சிறப்பு பூஜை செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.