Categories
மாநில செய்திகள்

இந்த வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளில்….. இன்று(செப்டம்பர் 15) முதல்….. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனாவுக்கு பிறகு 10,11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வானது கடந்த மே மாதம் ஐந்தாம் தேதி தொடங்கி 31ஆம் தேதி வரை நடைபெற்றது. அதன் பிறகு பொது தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்படது. தனித்தேவர்களுக்கும்தேர்வு முடிவு வெளியிடப்பட்டது. முன்னதாக தேர்வு முடிவுகள் வெளியானவுடன் பள்ளிகள் வாயிலாக தான் மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும்.

அந்த வகையில் கடந்த ஜூலை மாதம் மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் இணையதளத்தில் வெளியிடப்பட்டு அதை பதிவிறக்கம் செய்து கொள்ளவும் அறிவுறுத்தபட்டது. அதேபோல துணைத் தேர்வு எழுதியவர்களுக்கும் கடந்த மாதம் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்த நிலையில் இன்று(செப்டம்பர் 15) முதல் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் தங்களுடைய அசல் மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. மேலும் தனி தேர்வுகள் தாங்கள் எழுதிய தேர்வு மையங்கள் வாயிலாக அசல் மதிப்பெண் சான்றிதழை பெற்று கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது.

Categories

Tech |