மகாராணியாரின் இறுதிச்சடங்குக்காக வந்துள்ள மேகன் தனது உடையில் மறைத்து வைத்துள்ள பொருளால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
பிரித்தானிய இளவரசர் ஹரி மேகன் திருமணத்தைத் தொடர்ந்து ராஜகுடும்பத்தில் உருவான சர்ச்சைகள் பெரிதாகிக்கொண்டே செல்ல, ஒரு கட்டத்தில் மனைவியுடன் நாட்டை விட்டே வெளியேறியுள்ளார் ஹரி. அதன் பின் நடந்த ஒவ்வொரு விடயமும் ஹரிக்கும் ராஜகுடும்பத்தினருக்கும் இடையிலான பிலவை பெரிதாக்கிக் கொண்டே சென்றன. இந்நிலையில், பிரித்தானிய மகாராணியார் திடீரென உயிரிழக்க, இளவரசர் வில்லியம் தன் தம்பிக்கு அழைப்பு விடுத்தார். இதனை தொடர்ந்து ஹரியும் மேகனும் மகாராணியாரின் அஞ்சலி தொடர்பான நிகழ்ச்சிகளில் இளவரசர் வில்லியம் மற்றும் அவரது மனைவி கேட்டுடன் இணைந்து பங்கேற்றுள்ளார். இந்நிலையில், இளவரசர் ஹரியின் மனைவி மேகன் உடையில் மறைந்திருந்த ஒரு பொருள் திடீர் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. மேகனின் இடுப்புப் பகுதியில், அவரது உடைக்குள் ஏதோ ஒரு பொருள் மறைத்து வைக்கப்பட்டுள்ளது போல் காட்சியளிப்பதை வெளியாகியுள்ள புகைப்படங்களில் காணலாம்.
சிலர் அதை ஒலியை பதிவு செய்யும் ஒரு மைக் (microphone, a recording device) என்கிறார்கள். அதாவது மேகன் மகாராணியாரின் மரணத்தைத் தனது நெட்ஃப்ளிக்ஸ் ரியாலிட்டி ஷோவில் பயன்படுத்துவதற்காக, மைக் ஒன்றைப் பயன்படுத்தி நடப்பதை இரகசியமாக பதிவு செய்கிறாரா என சிலர் சமூக ஊடகங்களில் சந்தேகம் எழுப்பியுள்ளார்கள். ஆனால், மேகனுக்கு நெருக்கமான ஒருவர், மேகன் அப்படி மைக் எதையும் மறைத்து வைக்கவில்லை என்றும், அப்படி சொல்வது அவரது பெயரைக் கெடுக்கும் செயலாகும் என்றும் கூறியுள்ளார். இதற்கிடையில், சிலர் மேகனுக்கு ஆதரவாகவும் குரல் கொடுத்துள்ளார்கள். ஒருவர், அது ஒரு மருத்துவ உபகரணமாக இருக்கலாம் என்கிறார். அதாவது, அது இரத்த சர்க்கரையின் அளவை தொடர்ச்சியாக கண்காணித்து சமிக்ஞை கொடுக்கும் ஒரு உபகரணமாக இருக்கலாம், நானும் அத்தகைய ஒரு உபகரணத்தை என் உடலில் அணிந்துள்ளேன் என்று கூறியுள்ளார்.