நாமக்கலில் முதல் கட்டமாக 50 அரசு பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டம் நாளை தொடங்கப்பட இருப்பதாக எம்பி கூறியுள்ளார்.
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பயிலும் ஏழை மாணவர்களை கருத்தில் கொண்டு அரசு தொடக்கப் பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு காலை வேலைகளில் சத்தான உணவு வழங்கப்படும் என சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தினை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மதுரையில் தொடங்கி வைக்க இருக்கின்றார். இதன் பிறகு நாளை அனைத்து மாவட்டங்களிலும் அமைச்சர்கள் திட்டத்தை தொடங்கி வைக்க இருக்கின்றார்கள்.
இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் 50 அரசு தொடக்கப்பள்ளிகளில் இத்திட்டம் தொடங்கப்பட உள்ளது. இதுகுறித்து எம்.பி கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் கூறியதாவது, தமிழக முதல்வர் இன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்காக காலை உணவு வழங்கும் திட்டத்தை இன்று தொடங்கி வைக்கின்றார். இந்நிலையில் நாமக்கல் நகராட்சி திருச்செங்கோடு நகராட்சி மலைப்பகுதியில் உள்ள கொல்லிமலை ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் செயல்பட்டு வரும் 50 தொடக்க பள்ளியில் இத்திட்டம் தொடங்கப்பட இருக்கின்றது. முதற்கட்டமாக நாமக்கல்லில் இருக்கும் கொல்லிமலை பகுதி உள்ள 41 பள்ளிகளில் பயிலும் மலைவாழ் மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்பட இருக்கின்றது எனக் கூறியுள்ளார்.