விஜய் நடிப்பில் வெளியான பகவதி திரைப்படத்தின் கதை முதலில் ரஜினிக்கு எழுதப்பட்டதாக இயக்குனர் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமா உலகில் கமர்சியல் இயக்குனராக வலம் வருங்கின்றார் வெங்கடேஷ். இவர் மகா பிரபு திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதையடுத்து பல படங்களை இயக்கி பிரபலமானார். பின் நிலவே வா, செல்வா, பகவதி உள்ளிட்ட மூன்று படங்களை விஜய் வைத்து இயக்கி இருக்கின்றார்.
இவர் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான பகவதி திரைப்படத்தின் கதை முதலில் ரஜினிக்காக எழுதப்பட்டதாம். ரஜினியிடம் இத்திரைப்படத்தின் கதையை கூற பலமுறை முயற்சி செய்தும் அது நடக்கவில்லை. அப்பொழுது தான் ஷாஜகான் திரைப்படத்தின் டிரைலரை பார்த்தேன். அப்பொழுது இத்திரைப்படத்தின் கதை விஜய்க்கு சரியாக இருக்கும் என நினைத்து விஜயிடம் வலியுறுத்தியதாகவும் அதன்பின்னரே சென்ற 2002 வருடம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் பகவதி ஆகும்.