தமிழகத்தில் தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு மாதமே இருப்பதால் மக்கள் சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு செல்ல பேருந்துகளில் டிக்கெட்களை முன்பதிவு செய்ய தொடங்கியுள்ளனர். இந்நிலையில் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தனியார் பேருந்துகள் டிக்கெட் விலையை இரண்டு முதல் மூன்று மடங்கு வரை உயர்த்தி உள்ளன.
பொதுவாகவே தமிழகத்தில் தீபாவளி மற்றும் பொங்கல் உள்ளிட்ட பண்டிகை காலங்களில் மக்கள் சொந்த ஊருக்கு திரும்புவதால் ஒரு மாதத்திற்கு முன்பாகவே முன்பதிவு செய்வது வழக்கம். அவ்வகையில் இந்த வருடத்திற்கான தீபாவளி பண்டிகைக்கு பலரும் பேருந்துகளில் டிக்கெட்டுகளை முன் பதிவு செய்ய தொடங்கியுள்ளதால் சென்னையில் இருந்து கோவைக்கு 2500 முதல் 3200 வரையும், நெல்லைக்கு 3,950 முதல் மதுரைக்கு 3,100 ரூபாய் வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அதிர்ச்சடைந்துள்ளனர்.