தமிழகத்தில் கொரோனா காரணமாக இரண்டு வருடங்களுக்குப் பிறகு கடந்த ஆண்டு 10 மற்றும் 12-ம் மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் நடத்தப்பட்டு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது.இதில் தேர்வை எழுதாதவர்கள் மற்றும் தோல்வி அடைந்த மாணவர்களுக்கு துணைத்தேர்வு நடத்த திட்டமிடப்பட்டு கடந்த ஆகஸ்ட் மாதம் மாணவர்களுக்கு துணைத்தேர்வு நடைபெற்றது.
தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியான நிலையில் பள்ளி மூலமாக மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் உடனே வழங்கப்படும். அவ்வகையில் ஜூலை மாதம் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் இணையத்தில் வெளியிடப்பட்டது.இந்நிலையில் இன்று செப்டம்பர் 15ஆம் தேதி முதல் 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் தங்கள் அசல் மதிப்பெண் சான்றிதழ்களை பள்ளி மூலமாக பெற்றுக் கொள்ளலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.