தமிழகத்தில் புதிய மின் கட்டண உயர்வு அண்மையில் அமலுக்கு வந்தது. அதன்படி, தமிழ்நாட்டில் புதிய மின் கட்டண உயர்வு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளதாக தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது. 2027 வரை புதிய மின் கட்டண உயர்வு அமலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 8 ஆண்டுகளுக்குப் பின் மின் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
புதிய மின்கட்டண உயர்வில் 100 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இனி 101 – 200 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு மாதம் 27.50 என 2 மாதங்களுக்கு சேர்த்து 355 ரூபாயும், 201 – 300 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு 2 மாதங்களுக்கு சேர்த்து ரூ.145 ரூபாயும், 301- 400 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு 2 மாதங்களுக்கு சேர்த்து 295 கட்டணம் வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் 60 நாட்களுக்கு ஒரு முறை எடுக்கப்படும் மின் கணக்கீட்டில் புதிய கட்டணம் அமலுக்கு வந்த நாளிலிருந்து புதிய கட்டணமும் அதற்கு முந்தைய நாட்களுக்கு பழைய கட்டணமும் வசூல் செய்யப்படும் என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். மின் கட்டணம் அதிகமாக இருப்பதாக சிறு குறு நிறுவனங்கள் கருத்து தெரிவித்த நிலையில் உத்தேசிக்கப்பட்ட தொகையை விட குறைவான அளவில் தான் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.