இன்று முதல் இரண்டு நாட்களுக்கு நாடு முழுவதும் இந்தி தினம் கடைபிடிக்கப்படுகிறது.இந்நிலையில் வெளிநாட்டில் உள்ள இந்திய அரசு அலுவலகங்களில் இந்தி மொழி பயன்படுத்துவதை ஊக்குவிக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அலுவல் மொழி சட்டத்தை அமல்படுத்துவதில் உள்ள சிக்கல்களை நீக்க வேண்டும். அதற்காக கூட்டுக் குழுவை உருவாக்க வேண்டும்.ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதல் மற்றும் வெளியுறவு அமைச்சகத்தின் ஒருங்கிணைப்புடன் இந்த குழுக்கள் அமைக்கப்படும்.
இந்தியை ஊக்குவிக்க வெளிநாட்டில் பணியமர்த்தப்பட்ட மூத்த அதிகாரிகள் தகுதியான இந்தி மொழி நிபுணரை பரிந்துரைக்க வேண்டும். வெளிநாட்டில் உள்ள ஒவ்வொரு இந்திய அரசு அலுவலகங்களிலும் இந்து தினத்தை கொண்டாட வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.