இந்தியாவில் இன்றைய காலகட்டத்தில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிராக பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் கொடூரமான முறையில் அரங்கேறி வருகிறது. இதனை தடுப்பதற்கு அரசு தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தாலும் குற்றவாளிகள் இன்னும் அந்த தவறை செய்யத்தான் செய்கிறார்கள். பாலியல் வன்கொடுமைகள் குற்றம் குறைந்த பாடு இல்லை.
இந்த நிலையில் உத்தரபிரதேச மாநில தலீத் சிறுமிகள்( 15 மற்றும் 17 வயது) இருவர் கொலை செய்யப்பட்டு மரத்தில் தொங்கவிடப்பட்ட சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தில் வருவது போன்று சிறுமிகள் மரத்தில் தொங்க விடப்பட்டுள்ளனர். பைக்கில் வந்த சிலர் திடீரென சிறுமிகளை அடித்து கொலை செய்துவிட்டு தப்பி விட்டதாக சொல்கின்றனர். பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்வது உத்தரப்பிரதேசத்தில் அடிக்கடி நிகழும் துயரமாக உள்ளது.